
அரியலூர்
பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்து நான்கரை சவரன் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் காவலாளர்கள் அதிரடியாக பிடித்து கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், மண்டையன்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரராசு மனைவி வேம்பு (25). இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வேம்புவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
மேலும், கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில் வேம்பு புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா உசேன்நகரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மற்றும் சுதாகர் ஆகியோரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையும் மீட்கப்பட்டது.