தீவிரமடைகிறது கனமழை..! எச்சரிக்கும் வானிலை...!

 
Published : Sep 19, 2017, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
தீவிரமடைகிறது  கனமழை..! எச்சரிக்கும் வானிலை...!

சுருக்கம்

rain will be heavy today

தீவிரமடையும் கனமழை

தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலை ஒட்டியுள்ள, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள்; வங்க கடலை ஒட்டியுள்ள, தெலுங்கானா, அசாம், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களிலும், கன மழை பெய்து வருகிறது.

மேலும் தமிழகத்தை பொறுத்த வரையில்,தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.தொடர்ந்து  நகர்ந்து வரும் மேக கூட்டங்களால், தமிழகத்தில் ஆங்காங்கே திடீர் மழை பெய்கிறது. அதே நேரம் தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களின் பல இடங்களில், இன்று, கன மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இரவு நேரத்தில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று கிண்டி,போரூர்,அசோக் பில்லர்  உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது

அதிகரித்து வரும் மழையால், நொய்யல் ஆறு, ஒகேனக்கல் உள்ளிட்டவற்றில்  தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்ற  ஆண்டை விட இந்த ஆண்டு  பொதுவாகவே  அதிக மழை பெய்துள்ளதால்  விவசாயிகள்  பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்

PREV
click me!

Recommended Stories

அடேங்கப்பா... திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
ஓயாமல் ஊத்தப்போகுதாம் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!