
சுமார் 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த தனது மகனை, கூலிப்படையை வைத்து கொன்ற தாய் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகிலுள்ள பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சரண் ராம்தாஸ் (வயது 21). போதைக்கு அடிமையான இவர், அவர் உறவிர்கள் உட்பட12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போதையில் பலரை தொந்தரவு செய்துள்ளார். மகனைத் திருத்த முயன்றும் தாயால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெற்ற தாயையும் வளர்ப்புத் தாயையுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவனது தாய் ராம்சரணை கொல்ல முடிவெடுத்தார். இதற்காக கூலிப்படைக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தார். அவர்கள், ராம்சரணை, வாசி பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக்கொன்றனர். இந்த சம்பவம் நடந்தது கடந்த மாதம் 21 ஆம் தேதி.
இந்த தகவல் அறிந்த போலீஸார் கொலை செய்ய தூண்டிய தாயையும் கூலிப்படையை சேர்ந்த மூன்று பேரையும் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது