
தமிழகத்தில் பறந்து விரிந்திருக்கும் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததை அடுத்து, விவசாயிகள் காவிரி தண்ணீரை வணங்கி வரவேற்றனர்
144 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி மகா புஷ்கரம்
144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவிற்காக தண்ணீர் திறந்துவிட கோரி பக்தர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து,,கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு கடந்த 15ம் தேதி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பகோணத்தை வந்தடைந்தது காவிரி தண்ணீர்
கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்துக்கு வந்தது.
காவிரி தண்ணீரை வணங்கி வரவேற்ற விவசாயிகள்
காவிரி தண்ணீர் வருவதை கண்ட விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசினார். மேலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆரத்தி எடுத்து, பால் ஊற்றி, காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரவாரமாக வரவேற்றனர்