
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை தற்போது சேலத்தில் மீட்கப் பட்டுள்ளதுதிருவண்ணாமலையை மாவட்டத்தை சேர்ந்த மணிமேகலை என்பவர்,சென்னை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்.இவருக்கு 20 நாட்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த மணிமேகலை, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சுமித்ரா என்பவருடன் நன்றாக பழகியுள்ளார்.பின்னர், இருவரின் நட்பு தொடரவே, குழந்தையின் தாய் மணிமேகலைக்கு வேலை வேண்டும் என அந்த காவலாளி சுமித்ராவிடம் கேட்டுள்ளார்.
பின்னர் காவலாளி சுமித்ரா, அவருக்கு வேலை வாங்கி தருவதாக வழக்கறிஞர் மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நலையில் நேற்று முழு உடல் பரிசோதனை செய்வதற்காக தாய் மணிமேகலை வேறு வார்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வழக்கறிஞர் மணிமேகலை அந்த குழந்தையை கடத்தி சென்றதாக தெரிகிறது.இதனை அடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பூக்கடை காவல் ஆய்வாளர் ஜார்ஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கறிஞர் மணிமேகலையின் செல்போன் டவரை பின்தொடர்ந்த போலீசார் இன்று பிற்பகல் அந்த குழந்தையை சேலத்தில் மீட்டனர். பின்னர் இது குறித்து மூவரிடமும் தீவிர விசாரணை செய்த பின்னரே, வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் தன் குழந்தை கிடைத்ததையடுத்து தாய் மணிமேகலை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்