
தமிழக அரசு அலுவலகங்களில் பணியின்போது ஊழியர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், பணியின்போது அடையாள அட்டை அணிய வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே இருந்தது.
ஆனால், பணிநேரத்தின்போது, அரசு ஊழியர்கள், அடையாள அட்டை இன்றி இருந்தனர். இந்த நிலையில், அரசு ஊழியர்கள், அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்குப் பிறகு, அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.