திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு

Asianet News Tamil  
Published : Sep 19, 2017, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

Tirumurugan Gandhi cancels thief law

திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.

குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பாணம், திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.

இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.

ஆனால், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

PREV
click me!

Recommended Stories

ஆத்தாடி.. வெயில் இப்படி பொளக்குதே.. மழைக்கும் வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!