
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். இவரின் மனைவி சுப்பு ரெத்தினம். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஓம்கார் பாலாஜி, என்ஜினியரிங் படித்து வருகிறார். இளையமகன் பள்ளியில் படித்து வருகிறார்.
சுப்புரெத்தினம், கோவை குறிச்சியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சுப்புரெத்தினத்துக்கும் மகன் பாலாஜிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த சுப்புரெத்தினம் 17 தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையறிந்த அருகில் இருந்தோர், சுப்புரெத்தினத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்புரெத்தினத்துக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.