இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு மீண்டும் பெய்த மழை; வெளுத்து வாங்கியதில் 165 மி.மீ பதிவு...

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு மீண்டும் பெய்த மழை; வெளுத்து வாங்கியதில் 165 மி.மீ பதிவு...

சுருக்கம்

rain Took two days leave and heavy rain in kanniyakumari 165 mm recorded

கன்னியாகுமரி 

கன்னியாகுமரியில் கடந்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் மாவட்டம் முழுவதும் 165 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. பட்டையை கிளப்பு சூறாவளிக் காற்றும், கொட்டித் தீருக்கு கன மழையும் மக்களை  உற்சாகம் மற்றும் குதூகலத்தில் வைத்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழையின் தொடக்கம் முதலே கன மழையால் குளிர ஆரம்பித்தது இந்த மாவட்டம்.  இடையில் ஒன்றிரண்டு நாட்கள் மழை இல்லாமல் இருந்தது. 

புயலுக்கு முன் அமைதிபோலதான் இதனை பார்க்க வேண்டும். நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பரவலாக பெய்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு: 

பேச்சிப்பாறை - 11.4 மில்லி மீட்டர், பெருஞ்சாணி - 13.8 மில்லி மீட்டர், சிற்றார் 1 -  9.8 மில்லி மீட்டர், சிற்றார் 2 - 31 மில்லி மீட்டர், மாம்பழத்துறையாறு - 5 மில்லி மீட்டர், புத்தன் அணை - 12 மில்லி மீட்டர், பூதப்பாண்டி - 3.8 மில்லி மீட்டர், களியல் -  6.2 மில்லி மீட்டர், கன்னிமார் - 7.2 மில்லி மீட்டர், 

குழித்துறை -  3.6 மில்லி மீட்டர், சுருளக்கோடு - 10 மில்லி மீட்டர், தக்கலை - 2.4 மில்லி மீட்டர், குளச்சல் -  8.4 மில்லி மீட்டர், பாலமோர் -  24.2 மில்லி மீட்டர், ஆரல்வாய்மொழி -  2 மில்லி மீட்டர், கோழிப்போர்விளை -  7.2 மில்லி மீட்டர், அடையாமடை -  3 மில்லி மீட்டர், முள்ளங்கினாவிளை -  4 மில்லி மீட்டர். மொத்தம் - 165 மில்லி மீட்டர்.

PREV
click me!

Recommended Stories

திருத்தணியில் ரத்த வெள்ளத்தில் கதறிய வடமாநில இளைஞர்.. விடாத புள்ளிங்கோ.. தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
துணைவேந்தரை நியமனம்.. 3 ஆண்டுகள் டேபிளில் வைத்திருந்த மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர்