அடுத்த நான்கு தினங்களுக்கு அதிரடி காட்டப்போகுது மழை..!! ஜனவரியில் பெய்தால் அது குளிர்கால மழை என அறிவிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 31, 2019, 1:23 PM IST
Highlights

இந்தாண்டு  ஆண்டு வடகிழக்கு பருவமழை இரண்டு சதவீதம் அதிகமாக பெய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  மழை நீடிக்க உள்ள நிலையில்   ஜனவரி மாதத்தில் மழை பெய்யும் என்றும்  அது குளிர்கால மழையாக கருதப்படும் 

வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.  காற்றின்  மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்றுடன்  வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைகிறது,  ஆனாலும் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது , அன்றுமுதல்  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வந்தது.  கடந்த மாதம் சென்னையில் வலுபெற்ற பருவமழை கன மழையாக வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மழை ஒய்ந்து  சில நாட்களாக வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது . பின்னர் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது,  இந்நிலையில்   இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் , மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

  

காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில்  வானம் மேகமூட்டத்துட்ன காணப்படும் எனவும் அப்போது அவர் கூறினார்.  கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் அதிகபட்சமாக  பொன்னேரி ,  டிஜிபி அலுவலகம் எண்ணூரில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும்,  கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் இந்தாண்டு  ஆண்டு வடகிழக்கு பருவமழை இரண்டு சதவீதம் அதிகமாக பெய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  மழை நீடிக்க உள்ள நிலையில்   ஜனவரி மாதத்தில் மழை பெய்யும் என்றும்  அது குளிர்கால மழையாக கருதப்படும் எனவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

click me!