தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை ….. காலையிலேயே நல்ல செய்தி !!

By Selvanayagam PFirst Published Mar 18, 2019, 7:10 AM IST
Highlights

தெற்கு கர்நாடகத்தின் உள் பகுதி வளிமண்டலத்தில்  மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக மழை என்பதே முற்றிலும் இல்லாமல் போனது. மேலும் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடும் வெயில் இருப்பதால் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது.

இந்நிலையில் தான் தெற்கு கர்நாடகத்தின் உள் பகுதி வளிமண்டலத்தில்  மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும்  வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முத்ல் மிதமானது வரை மழை பெய்ய வாப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.

அதன்பிறகு, வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகியவற்றில் வழக்கத்தைவிட 3 முதல் 7 டிகிரி வரை வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!