பாஜகவை விமர்சனம் செய்ததை விடவா சவுக்கு உங்களை விமர்சனம் செஞ்சுட்டாரு! அதுக்காக இப்படியா? நாராயணன் திருப்பதி!

Published : May 02, 2024, 12:45 PM IST
பாஜகவை விமர்சனம் செய்ததை விடவா சவுக்கு உங்களை விமர்சனம் செஞ்சுட்டாரு! அதுக்காக இப்படியா? நாராயணன் திருப்பதி!

சுருக்கம்

சில பத்திரிகைகள் தரக்குறைவின் எல்லைக்கே சென்று விடுவதும் கூட சர்வசாதாரணமாகி விட்ட நிலையில், திமுக அரசு மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து சவுக்கு சங்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது அறிந்ததே. 

சவுக்கு சங்கர் பணியாளர்கள் மீதான திமுக அரசின் அடக்கு முறை முறையற்றது என்பதும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக தடுக்கிறது என்பதே உண்மை என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும் அவதூறு பரப்புவதோடு, சில பத்திரிகைகள் தனிப்பட்ட முறையில் பாஜக நிர்வாகிகள் குறித்து விமர்சனம் செய்வதும் கூட தொடர் கதையாகி வருகிற நிலையில், சில வருடங்களுக்கு முன் 'குளியறைக்குள் எட்டிப்பார்த்த ஆளுநர்' என்ற தரம் கெட்ட பொய்  செய்தியை இன்றைய ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: அரசியலுக்காக வெட்கமே இல்லாமல் போலி மதசார்பின்மை பேசும் ஹிந்து விரோத ஸ்டாலின்! மோடியை விமர்சிப்பதா?பாஜக விளாசல்

மேலும் சில பத்திரிகைகள் தரக்குறைவின் எல்லைக்கே சென்று விடுவதும் கூட சர்வசாதாரணமாகி விட்ட நிலையில், திமுக அரசு மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து சவுக்கு சங்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது அறிந்ததே. அந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லாது இருந்தால் அந்த குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு மறுக்க வேண்டும் அல்லது சவுக்கு சங்கர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடுக்க வேண்டும். 

அதை விடுத்து சவுக்கு சங்கரின் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மீது அற்ப காரணங்களுக்காக வழக்கு தொடுப்பதும், நடவடிக்கை எடுப்பதும் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதை தொடர்புடையவர்கள் உணர்வார்களாக! தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் இதை விவகாரத்தில் தலையிட்டு தொடர்புடையவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இல்லையேல், நேற்று நான், இன்று நீ, நாளை யாரோ என்ற நிலை உருவாகும்.

இதையும் படிங்க:  அடேங்கப்பா.. ஏப்ரல் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் இத்தனை லட்சம் பேர் பயணமா?

பல்வேறு சமயங்களில் தனிப்பட்ட முறையில் சவுக்கு சங்கர் அவர்கள் பாஜக தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்த போது, நாம் அதை கண்டித்தோம், சில சமயங்களில் சட்ட ரீதியாக வழக்கும் தொடரப்பட்டது. பல விவகாரங்களில் சவுக்கு சங்கரின் கருத்துகள் நமக்கு ஏற்புடையதும் அல்ல என்றாலும், தற்போது சவுக்கு சங்கர்  பணியாளர்கள் மீதான திமுக அரசின் அடக்கு முறை முறையற்றது என்பதும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக தடுக்கிறது என்பதே உண்மை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை