Sengottaiyan : அதிமுகவில் உட்கட்சி மோதலால் பாஜகவில் இணைகிறேனா.?? செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்

By Ajmal Khan  |  First Published May 2, 2024, 1:02 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். கோடான கோடி தொண்டர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்கத்திற்கு தூணாக நின்று பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். 


செங்கோட்டையனும் அதிமுகவும்

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர், தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது சுற்றுப்பயண திட்டத்தை வடிவமைத்தவர் செங்கோட்டையன், அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என முக்கிய பொறுப்புகளை வகித்தவர், கடந்த 45 ஆண்டுகாலமாக அதிமுவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மோதலி்ன போது அடுத்த முதலமைச்சராக செங்கோட்டையன் பெயரே அடிப்பட்டது.

Tap to resize

Latest Videos

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ்.!எந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.? எப்போது வெளியாகிறது.? இதோ தகவல்

அதிமுக டூ பாஜக

இந்தநிலையில் அதிமுக மேற்கு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செங்கோட்டையனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்தநிலையில்  இந்த தகவலை மறுத்துள்ள செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதில், 45 ஆண்டு காலமாக அரசியலில் எந்த ஒரு அரசியல் கட்சினரும் சிறு குற்றம் கூட சொல்லமுடியாத அளவிற்கு எனது அரசியல் பயணம் நேர்மையாக தொடர்ந்து வருகிறது என தெரிவித்தார். ஆனால் என்னைப்பற்றி அவதூறாகவும் சற்றும் உண்மையில்லாத வகையிலும் செய்தியை வெளியிட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த செய்தி தொடர்பாக  பத்திரிகை செய்தியாளர் என்னிடம்  கருத்தை கேட்டிருக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஆதாரமற்ற செய்தி

இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை தாங்களாகவே வெளியிடுவது பத்திரிகை தர்மம் இல்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும்  இது போன்ற உணமைக்கு புறம்பான செய்தியை வெளிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.  எதிர்காலத்தில் இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை  பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  அதிமுகவில்  உள்ள கோடான கோடி தொண்டர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்கத்திற்கு நான் தூணாக நின்று பணியாற்றி வருகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்தார்.

மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருள் கடத்தல்..!! மாஜி அதிமுக அமைச்சரின் உறவினரை தட்டி தூக்கிய போலீஸ்.?

click me!