மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் குமரி, நெல்லை, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: பாஜகவை சேர்ந்த அஞ்சலை யார்? இவர் யாருடைய மனைவி தெரியுமா? இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பா?
அதேபோல் சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: School Leave : விடாமல் தொடரும் மழை..! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம் தெரியுமா.?
இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.