
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, தூத்துக்குடி, ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இரவும், நாளை காலையும் மிதமானது முதல் அதிகனத்த மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வேகமாகக் குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம்! கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு 12,000 கன அடி நீர் திறப்பு
இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், திருச்சி, தேனி, தஞ்சை என்று தமிழகத்தின் பல இடங்களிலும் லேசான முதல் அதிக கனத்த மழை வரை பெய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னையில் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்த காரணமாக பெரிய அளவில் வாகன நெரிசில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் பல இடங்களில் மிதமானது முதல் கனத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது என்றும். ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை நடக்கவிருந்த தேனீர் விருந்து நிகழ்வும் மழையின் காரணமாக மறுதேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று சுமார் 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.