அரியலூர் அருகே கோடங்குடி கிராமத்தில் 100 நாள் வேலை செய்த வாசுகி என்பவர் மயக்க விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் வாசுகி. இவர் கோடங்குடி கிராமத்தில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நடைபெறுகிறது. இந்த வேலை மேலக்காடு பாதையில் நடைபெற்று வருகிறது.
வேலை செய்து கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்ற போது பரிசோதித்த 108 மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இது குறித்து தா.பழூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.100 நாள் வேலை தளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!