இராஜேந்திர சோழனின் படம் இல்லாமல் அவருக்கு அரசு விழாவா? போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது

By Velmurugan s  |  First Published Aug 12, 2023, 2:51 PM IST

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படத்தை வைத்து விழா நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  இந்து முன்னணியினர் 20 பேர் கைது.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் மாமன்னன் ராஜேந்திர சோழனின்  பிறந்தநாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு ராஜேந்திர சோழனின் திருவுருபடம் வைக்காமல் தமிழக அரசு விழா கொண்டாடுவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் இந்து முன்னணியிரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவிலுக்குள் சென்று சுவாமியை வழிபட்டு செல்வதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து; 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து - 2 பேர் கவலைக்கிடம்

இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினரை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் இந்து முன்னணியினர் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நந்தி மீது படமெடுத்தபடி சிவனை தரிசித்த நாகம்; பக்தர்கள் பரவசம்

 

click me!