குறிக்கப்பட்டது தேதி.... டிசம்பர் 5 முதல் ஜனவரி 8 வரை..! மீண்டும் தமிழகத்தை உலுக்கும் புயல்...!?

By thenmozhi gFirst Published Nov 24, 2018, 1:47 PM IST
Highlights

கஜா புயல் வந்ததும் வந்தது தமிழக கடலோர மாவட்டங்களை மிகவும் பாதிப்படைய செய்து விட்டது....புயல் வந்து ஒரு வார காலமாகியும் இன்றளவும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

கஜா புயல் வந்ததும் வந்தது தமிழக கடலோர மாவட்டங்களை மிகவும் பாதிப்படைய செய்து விட்டது.... புயல் வந்து ஒரு வார காலமாகியும் இன்றளவும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, டிசம்பர் 5 முதல் ஜனவரி 8 வரை மட்டுமே 8 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எட்டு காற்றழுத்த தாழ்வு நிலையில், இரண்டு மட்டும் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த இரண்டு புயலால் தென் தமிழகம் மற்றும் வட தமிழகம் இரண்டு பகுதிக்கும் மழை இருக்கும் என்றும், அதில் குறிப்பாக வட தமிழகத்தில் இயல்பான ‌அளவும், டெல்டா பகுதியில் 20% அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள்பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டு உள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கு லேசான மழை பெய்து வந்தது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 22 சென்‌டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொறுத்தவரை இன்று வெயில் காலை முதலே சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இருந்த போதிலும் தமிழகத்தின் உள்மாவட்டதில் ஒரு சில இடங்களில் மட்டும், லேசான மழை பெய்து உள்ளது. எனவே, இப்போதைக்கு மழை வர வாய்ப்பு இல்லை என்றாலும் டிசம்பர் இறுதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.
 

click me!