கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை!!

Published : Oct 14, 2022, 06:35 PM ISTUpdated : Oct 14, 2022, 11:27 PM IST
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை!!

சுருக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகின்றனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சமீபமாக பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனை செய்து வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம்  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: ஜெயராமன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் ; காவல்துறையிடம் அறிக்கை கேட்டு நீதிமன்றம் உத்தரவு!!

அந்த வகையில் கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அமைந்துள்ளது. அலுவலகத்தின் அறைகளை மூடிக்கொண்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு உறுப்பினர் தனலட்சுமி மற்றும் மற்றொரு ஊழியரான கார்த்திக் ஆகியோர் காப்பகத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்பும் ஒரு குழந்தைக்கான சான்றிதழை வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. 

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு மதுரை இனிப்புக் கடைகளுக்கு அதிகாரி எச்சரிக்கை; கேட்காவிட்டால் அபராதம்!!

இதை அடுத்து இருவரும் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதேபோல், KG சாவடியில் லஞ்சம் வாங்கியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரி, உதவியாளர் யுவராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.33,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!