நெல் ஈரப்பத அளவு 22% ஆக அதிகரிக்க வாய்ப்பு.. தமிழகத்திற்கு மத்திய குழு வருகை..

By Thanalakshmi V  |  First Published Oct 14, 2022, 5:55 PM IST

நெல்கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் தமிழகம் வரவுள்ளது. தமிழக அரசின் கோரிக்கை அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் குழு ஆய்வு நடத்த உள்ளது. 
 


மத்திய அரசின் உணவுக் கழகம் சார்பில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்கிறது. அதன்படி,  மத்திய அரசு 19% ஈரப்பதம் உள்ள நெல்கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது.

ஆனால் தற்போது டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக,  தற்போது நெல் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos

மேலும் படிக்க:படிக்க சொன்னதால் வீட்டை விட்டு ஓடிய மாணவன்.. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மீட்பு..மகனை கட்டிப்பிடித்து கதறிய தந்தை

இதனால் தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நெல்கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியிருந்தார்.

இதை தொடர்ந்து நெல்கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிப்பது தொடர்பாக மத்தியக் குழு தமிழக வந்து ஆய்வு செய்யவுள்ளது. இதனால் இதுக்குறித்து விரைவில் ஆய்வு செய்யும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:சத்யாவை கொன்றது போலவே, சதீஷையும் ரயில்முன் தள்ளி கொல்லுங்க.. நீதிபதியை கெஞ்சி கேட்ட விஜய் ஆண்டனி.

click me!