உறவினர்களுக்கு டெண்டர்..! இபிஎஸ் செயல்பாட்டால் அரசுக்கு இழப்பு..! ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனு

By Ajmal KhanFirst Published Aug 2, 2022, 12:41 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.வின் ஆர் எஸ் பாரதி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் முறைகேடு

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும் இதுகுறித்து 2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார்.  ‘ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும்  இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் எடப்பாடி கே.பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ் பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வெளிப்படையான விசாரணை நடத்த சிபிஐக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

Latest Videos

“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு

இபிஎஸ் செயல்பாட்டால் அரசுக்கு இழப்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டில்  விசாரித்த  உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்தது. இதனையடுத்து சுமார் நான்கு ஆண்டுகளாக விசாரணையின்றி  நிலுவையில் இருந்து வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் , வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதி விசாரிப்பதாக அறிவித்திருந்தது. இந்தநிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நெடுஞ்சாலை சாலை ஒப்பந்தங்கள், திட்டங்களை, தனது நெருங்கிய உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியது உலக வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது. எடப்பாடி பழனிசாமியின் இந்த  செயலால் அதிக விலையை அரசு ஒப்பந்தங்களுக்கு கொடுக்க நேர்ந்ததாகவும், இதனால் கடுமையான  இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறதா..? பாஜக நிர்வாகியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்

மேலும், எடப்பாடி  பழனிசாமி செய்த  தவறுகள் மீதான  விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில்  வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு என குற்றம்சாட்டியுள்ளார். எனவே சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிபடுத்த வேண்டும் என தனது பதில் மனுவில் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு.. நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

 

click me!