திடீர் மயக்கம்...சூடான கூழ் அண்டாவில் விழுந்தவர் பலி...! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்

By Ajmal KhanFirst Published Aug 2, 2022, 11:13 AM IST
Highlights

 மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென  மயக்கம் ஏற்பட்டு பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த நபரின் அதிர்ச்சியான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

சூடான கூழ் அண்டாவில் விழுந்த இளைஞர்

ஆடி மாதம் என்றாலே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் கூழ் காய்ச்சும் நிகழ்வு நடைபெறும் அந்த வகையில், மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் கடந்த  29ஆம் தேதி  ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் நேர்த்திகடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கப்பட்டது. அப்பொழுது கூழ் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் (எ) முருகன் என்ற இளைஞருக்கு வெப்பம் மற்றும் அதிக சூடு காரணமாக எதிர்பாராதவிதமாக மயக்கம் ( தலைசுற்றல்) ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  கொதித்துகொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

களைகட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்...2 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பக்தர்கள்...

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. 4ம் தேதி வரை உஷாரா இருங்க.. பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை.!

சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

அப்போது அதீத வெப்பத்துடன் இருந்த கூழானது முருகனின் உடல் முழுவதும் கொட்டியதால் காயத்தால் துடித்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகனுக்கு 65% தீக்காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 29 ஆம் தேதியே  உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த முருகன் கூழ் பாத்திரத்தில் உள்ளே விழும் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூழ் பாத்திரத்தில் விழுந்த முருகனை அங்கு கூடியிருந்தவர்கள் மீட்க முயற்சி செய்தும் சூடான கூழ் என்பதால் அவரை உடனடியாக மீட்க இயலாத நிலை ஏற்படுவது போன்ற காட்சிகள் உள்ளது.  அண்டாவில் விழுந்த முருகனால் அதில் இருந்து எழுந்திரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பல முறை முயற்சி செய்தும் எழுந்திருக்க முடியவில்லை. இதனையடுத்து அங்கிருந்த ஒருவர் அண்டாவை கீழே தள்ளிவிட்டார். இதனையடுத்து தான் அருகில் இருந்தவர்களால் முருகன் மீட்கப்படுகிறார். இந்த காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்

டெண்டர் முறைகேடு நெருக்கடி கொடுக்கும் திமுக...! தப்பிப்பாரா இபிஎஸ்..? உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை

 

click me!