Puzhal Lake: மக்கள் யாரும் பதற்றம் அடைய தேவையில்லை! சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது.. தமிழக அரசு தகவல்!

By vinoth kumar  |  First Published Dec 7, 2023, 12:39 PM IST

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.


சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாகவும், மண் அரிப்பு ஏற்பட்ட சாலை மட்டப்படுத்தப்பட்டு வருகிறது என தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 21.20 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும். இன்றைய (07:122023) காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- மிக்ஜாம் புயலால் வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் பாதிப்பா.? இழப்பீடு பெற சிறப்பு முகாம்- வெளியான தகவல்

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 

இதையும் படிங்க;- சென்னையை மீண்டும் ஒரு புயல் தாக்கப்போகுவதா? அலறும் பொதுமக்கள்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவது என்ன?

இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி  மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என  நீர்வளத்துறை சார்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!