புயல் பாதிப்பால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்.பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் வாகனங்களை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு பெறும் வகையில் 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னையை புரட்டி போட்ட வெள்ளம்
வடகிழக்கு பருவமழை தீவரம் அடைந்தத நிலையில் வங்க கடலில் உருவான புயல் சென்னையை புரட்டி போட்டது. இதன் காரணமாக பல் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. குறிப்பாக மேடவாக்கம், வேளச்சேரி, முடிச்சூர், மேற்கு தாம்பரம் மற்றும் வட சென்னை உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் மழை நீரில் சிக்கி இயங்க முடியாமல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டவருகளுகு இழப்பீடு வழங்கவதற்கான முகாமை தனியார் நிறுவனர்கள் தொடங்கியுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்
அந்த வகையில், வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் முழுக் காப்பீடு (காம்ப்ரஹன்சிவ்), 3-வது நபர் காப்பீடு என இரண்டு வகைகள் உள்ளன. முழுக் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே சாலை விபத்து, தீ விபத்து, புயல், வெள்ளம், நிலநடுக்கம், திருட்டு ஆகியவற்றின்போது வாகன உரிமையாளர் இழப்பீடு கோர முடியும். இழப்பீடு கோரும்போது, வாகனம் எப்படி சேதமடைந்தது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்துக்காக அந்தப் புகைப்படங்கள் தேவைப்படும். மேலும், காப்பீட்டு நிறுவனத்திடம் வாகனத்தின் சேதம் குறித்து தகவல் தெரிவிக்க தாமதப்படுத்தக் கூடாது. அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தநிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த வாங்களுக்கு இழப்பீடு பெற 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனர் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது.
காப்பீடு பெற சிறப்பு முகாம்
அந்த வகையில், அடையாறு, தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, வாகனங்களுக்கு காப்பீடு செய்த பாலிசிதாரர்கள் இழப்பீடு கோருவதற்கு 71flood23@newindia.co.in என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. மேலும், www.newindia.co.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் பெற 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இழப்பீடு வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை தொடங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்
சென்னை பெரு வெள்ளத்திலும் அசால்டாக செல்லும் மஹிந்திரா தார்.. ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட வீடியோ..