Puzhal Lake: புழல் ஏரியின் கரை உடையும் அபாயம்.. பீதியில் பொதுமக்கள்..!

By vinoth kumar  |  First Published Dec 7, 2023, 11:30 AM IST

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணம் இந்த 4 மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. 


தொடர் கனமழை காரணமாக புழல் ஏரி நிரம்பி வழிவதால் அதன் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணம் இந்த 4 மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. சென்னையின் முக்கிய  நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளவை எட்டியது. புயலால் கொட்டி தீர்த்த மழையால் ஏரிக்கு 8,500 கன அடி நீர் வரத்து இருந்தது. பாதுகாப்பு கருதி 7,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- சென்னையை மீண்டும் ஒரு புயல் தாக்கப்போகுவதா? அலறும் பொதுமக்கள்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவது என்ன?

இந்நிலையில், புழல் ஏரி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ள நிலையில் சாலையும் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். புழல் ஏரி உடையும் பட்சத்தில் வடகரை, கிராண்ட்லைன் ஊராட்சிகள், மாநகராட்சி பகுதியை சேர்ந்த காவாங்கரை திருநீலகண்டர் நகர், பாலாஜி நகர், மாதவரம் நெடுஞ்சாலை, ஆமுல்லைவாயல் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், செங்குன்றம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் துண்டிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. 

click me!