மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

By SG BalanFirst Published Dec 6, 2023, 8:42 PM IST
Highlights

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.

மிக்ஜம் புயலால் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாகப் பதிகப்பட்டுள்ளன. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்துவிட்ட நிலையில், மழைநீர் தேங்கியுள்ள இன்னும் சில இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்க இருக்கிறார்.

Latest Videos

முன்னதாக, பிரதமர் மோடி மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து ட்விட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, ஆந்திரா மற்றம் புதுச்சேரி மாநிலங்களில் அன்புக்குரியவர்களை இழந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் குடிநீர் பெற கட்டணமில்லா எண் அறிவிப்பு!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர் என்று குறிப்பிட்ட பிரதமர், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இயல்பு நிலை திரும்பும் வரை நிவாரணப் பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் செய்துவருகிறது. பல இடங்களில் குடிநீர் கூட கிடைக்கவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து, லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதற்கு 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

மின்கட்டணம் செலுத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதத் தொகை இல்லாமல் மின் கட்டணத்தைச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேரு ரெண்டு தவறுகளைத் தவிர்த்திருந்தால்... மக்களவையில் அமித் ஷா ஆவேசப் பேச்சு

click me!