புதிய அணி.. களத்தில் இறக்கிய முதல்வர் மு.க ஸ்டாலின்.. படுவேகமாக நடக்கும் வெள்ள நிவாரணப் பணிகள் !!

By Raghupati R  |  First Published Dec 6, 2023, 9:04 PM IST

மிக்ஜாம்‌ புயல்‌ தாக்கத்தால்‌ ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக, சென்னை நகரில்‌ நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ ஆணையிட்டுள்ளார்.


சென்னையில் மிச்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுவரை முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சட்டத்துறை அமைச்சர்‌ எஸ்‌. இரகுபதி. கே.கே. நகர்‌ மற்றும்‌ எம்‌.ஜி.ஆர்‌. நகர்‌ பகுதிகளுக்கும்‌,  சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ சிவ,வீ. மெய்யநாதன்‌ அவர்கள்‌, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்‌ ஆகிய பகுதிகளுக்கும்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்‌ துறை அமைச்சர்‌ திரு ஆர்‌.எஸ்‌. ராஜகண்ணப்பன்‌ அவர்கள்‌ இராயபுரம்‌ பகுதிக்கும்‌, ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாண்புமிகு பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு. அன்பில்‌ மகேஷ்‌ பொய்யமொழி அவர்கள்‌ வில்லிவாக்கம்‌, அண்ணா நகர்‌, அம்பத்தூர்‌. கே.கே. நகர்‌ ஆகிய பகுதிகளுடன்‌ கூடுதலாக அரும்பாக்கம்‌ பகுதிகளுக்கும்‌,   சென்னை, எழிலகத்தில்‌ உள்ள வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை துறையின்‌ மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில்‌ வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளைக்‌ கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப்‌ பணிகளுக்குத்‌ தேவையான உத்தரவுகளை வழங்கி, மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணி, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பொதுமக்களிடம்‌ இருந்து வரும்‌ அழைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும்‌ மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.கே.எஸ்‌.எஸ்‌ ஆர்‌. ராமச்சந்திரன்‌ அவர்களுடன்‌ தொலைக்காட்சி மற்றும்‌ சமூக வலைதளங்களில்‌ வெளிவரும்‌ மழை வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ தொடர்பான செய்திகளை சேகரித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்புப்‌ பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு தொழில்‌, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்‌ வர்த்தகத்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ டி.ஆர்‌.பி. ராஜா அவர்களையும்‌ நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.  

மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌ மருத்துவர்‌ மா. மதிவேந்தன்‌ மற்றும்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு. கே.ஆர்‌.என்‌. ராஜேஷ்‌ குமார்‌ ஆகியோரை திருவொற்றியூர்‌ பகுதிக்கு நியமித்து நிவாரணம்‌ மற்றும்‌ சீரமைப்புப்‌ பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

click me!