பிளஸ் 1 மாணவன் தற்கொலை! கடிதத்தில் வெளியான அதிர்ச்சி! சரமாரியாக தாக்கப்பட்ட ஆசிரியர்கள்!

By sathish kFirst Published Sep 7, 2018, 4:23 PM IST
Highlights

பிளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. மாணவனின் தற்கொலைக்கு நீதிகேட்டு அவனது உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பிளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. மாணவனின் தற்கொலைக்கு நீதிகேட்டு அவனது உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத் (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1படித்து வந்தார். கடந்த 3-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவரின் புத்தகப்பையை அவரது பெற்றோர் வியாழக்கிழமை பார்த்தனர். புத்தகத்தின் நடுவில் கடிதம் ஒன்று இருந்தது இதனைப் பார்த்த மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், கண்ணப்பன், குமார், உடற்கல்வி ஆசிரியர்கள்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆசிரியர்கள் யாரும் பாடம் நடத்தாமல் கேள்வி கேட்டு அடித்ததால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பள்ளியில் திரண்டனர். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் இல்லாத நிலையில் கணித ஆசிரியர் கண்ணப்பனை சரமாரியாக தாக்கினர். 

இந்த தகவலால் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்களும் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.உயிரியல் ஆசிரியர் குமார் ஆய்வக அறையில் மறைந்து கொண்டதால் தப்பினார். உடற்கல்வி ஆசிரியர்கள் இருவரும் அங்கிருந்து தப்பினர். 

click me!