வரும் மே 1-ம் தேதி முதல் தமிழகத்தில் வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதற்கேற்ப நாட்டின் பல மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை இந்திய வானிலை மையம் விடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
undefined
மக்களே உஷார்! அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசுமாம்! ஆனாலும் மழையும் இருக்காம்.. வானிலை மையம்!
குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் மே 1-ம் தேதி முதல் தமிழகத்தில் வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஒரு மோசமான செய்தி என்னவென்றால் தமிழகத்தில் மே 1 முதல் 4 வரை வெப்ப அலை உச்சத்தில் இருக்கும். வட உள் தமிழகத்தில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சேபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் வெப்ப அலை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஒரு நல்ல செய்தியும் உள்ளது மே 5 முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.
Bad News - Heat wave in Tamil Nadu is expected get its peak from May 1 to 4 in North interior Tamil Nadu particularly Vellore, Ranipet, Tiruvallur, Kanchepuram, Erode, Salem, Namakkal, Trichy, Karur belts.
Good news - At same time, there will be rains from May 5 in interiors.
இதனிடையே இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வட உள் தமிழக மாவட்டஙள் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இன்று முதல் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுபோதையில் பெண் VAO வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜிவ்காந்தி... தட்டித்தூக்கிய போலீஸ்