விழுப்புரம் மாவட்டத்தில் பெண் வி.ஏ.ஓவை திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ் காந்தி, தலையை முடியை பிடித்து இழுத்து சென்று வயிற்றிலேயே எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் ராஜிவ்காந்தியை கைது செய்துள்ளனர்.
பெண் விஏவை தாக்கிய திமுக நிர்வாகி
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 19ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஆ.கூடலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ் காந்தி, பெண் வி.ஏ.ஓவை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் ராஜிவ்காந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். வாக்குப்பதிவின் போது இரவு வாக்குச்சாவடியில் பணியாற்றிக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி என்பவர் உணவு வழங்கியுள்ளார். அப்போது அந்த பகுதிக்கு வந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி, நான் திமுகவினருக்காக வாங்கி வந்த உணவு எப்படி எடுத்து அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கலாம் என்று வாக்குவாதம் செய்துள்ளா். ஒரு கட்டத்தில் அந்த பெண் அதிகாரியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
undefined
மருத்துவமனையில் பெண் விஏஓ
இதனால் அங்கிருந்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து தடுத்துள்ளனர். இதனையடுத்து இரவு நேரத்தில் மீண்டும் வாக்குச்சாவடக்கு வந்த திமுக நிர்வாகி முழு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண் வி.ஏ.ஓவை சரமாரியாக தாக்கியதாகவும், தலை முடியை இழுத்தும், வயிற்றில் எட்டி உதைக்கவும் செய்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் திமுக நிர்வாகி தாக்கியதில் அந்த பெண் வி.ஏ.ஓ வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பெண் அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தியும், கிராம மக்களும் கானை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
திமுக நிர்வாகி கைது
அப்போது திமுக நிர்வாகியும், பெண் வி.ஏ.ஓ சாந்தியும் ஒரே இடத்தில் உணவு வாங்கியுள்ளனர். இதனை பணியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கு விஏஓ வழங்கியதை தான் வாங்கி வந்த உணவை கொடுத்துவிட்டதாக நினைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது வி.ஏ.ஓ.சாந்திக்கும், திமுக நிர்வாகிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே முன் விரோதத்தில் போதையில் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் கடந்த ஓரு வாரமாக தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி ராஜிவ்காந்தியை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.