தனியார் தொலைக்காட்சி கேமராமேன் குத்திக்கொலை... வேலூரில் பரபரப்பு...

 
Published : May 25, 2018, 02:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
தனியார் தொலைக்காட்சி கேமராமேன் குத்திக்கொலை... வேலூரில் பரபரப்பு...

சுருக்கம்

Private television cameraman killed

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் வேலூர் மாவட்ட கேமரமேன், அடையாளம் தெரியாத நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலுர் மாவட்டம், கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். வேலூர் மாவட்டத்தின், இமயம் தொலைக்காட்சியின் கேமராமேனாக வேலைப்பார்த்து வந்தார்.

இந்த நிலையில், கேமராமேன் அசோக்குமார், கொசப்பேட்டை பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அசோக்குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேமராமேன் அசோக்குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசோக்குமாரை கொலை செய்வதற்கு, தொழில்போட்டி காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்