
இன்று காலை சமயபுரம் கோயில் யானை மசினிக்கு மதம் பிடித்துவிட்டது. யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த யானை பாகன் கஜேந்திரன் தன் காலால் நசுக்கி கை கால்களை பிய்த்து எறிந்த்து யானை.
கோயிலிருந்து மக்கள் இதனைக்கண்டு அலறி அடித்து ஓடினர். ஓடியதில் சிறுகுழந்தைகள் மற்றும் பெண்கள் காயமுற்றுள்ளனர்.
இதனால் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்த யானையை அடக்க கும்கி யானை வருவிக்கப்பட்டது. இந்நிலையில் யானை அடக்க பயிற்சி பெற்ற ஆறுபேர் கொண்ட குழுவும் கோயிலுக்கு வந்தது.
இந்நிலையில் யானையை போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த குழு யானை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்து யானையை வேறு இட்த்திற்கு மாற்றியுள்ளன்ர்.
இறந்த யானைபாகன் ராஜேந்திரன் உடலை காவல்துறை கைப்பற்றி அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது. எதனால் யானைக்கு மதம் பிடித்த்து என்பதை கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பின் தெரிய வருமென காவல்துறை கூறியுள்ளது.