நிலுவையில் உள்ள ஊதியத்தை கேட்டு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

 
Published : Jun 01, 2018, 09:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
நிலுவையில் உள்ள ஊதியத்தை கேட்டு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Private estate workers are protesting to hear the pending wage ...

நீலகிரி

நீலகிரியில்ல், நிலுவையில் உள்ள ஊதியத்தை கேட்டு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம்,  பந்தலூரில் உள்ள தனியார் எஸ்டேட்டில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். 

இதில், தற்காலிக தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாகவும், நிரந்தர தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களாகவும்  சம்பளம் வழங்கவில்லை. 

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி,  சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். பி.டபுள்யூ.யூ.சி. தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். 

இதில், கோரிக்கை நிறைவேறும்வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!
சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?