டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகிலேயே இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றும் இளைஞர்கள் தொழில் முனைவோராகளாக மாற முன்வர வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இளைஞருக்கு ஊக்கம் அளித்த அப்துல்கலாம்
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தி பிரதமர் மோடி,நேற்று செஸ் ஒபிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கிவைத்தார். இதனையடுத்து நேற்று இரவு ராஜபவனில் தங்கிய அவர், இன்று காலை தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். பிரதமர் மோடியை பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோரும் வரவேற்றனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபிரதமர் மோடி விழாவுக்கான அங்கி அணிந்து பங்கேற்றார். பட்டமளிப்பு விழாவிற்கு பிறகு நிகழ்ச்சியில் பேசிய பிரதர் மோடி,
அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார். பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் என கூறினார். நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.இந்திய இளைஞர்களை உலகமே உற்றுநோக்குவதாகவும் அப்துல் கலாமின் கருத்துக்கள் இளைஞர்களை ஊக்கம் பெற செய்தது என்றும் இது இளைஞர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த தருணம் என்றும் தெரிவித்தார். கொரோனா காலத்தில் நாட்டை பாதுகாக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் உலக அளவில் செல்ஃபோன் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளதாகவும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், வாகன ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
எல்லாருக்கும் எல்லாம்.. இதுவே திராவிட மாடல்.. மேடையில் மோடியை அதிரவைத்த முதல்வர் ஸ்டாலின்.!
தடைகளை எல்லாம் வாய்ப்புகளாக மாற்றி இந்தியா முன்னேறி வருவதாக கூறிய பிரதமர், குழந்தைகள் கூட தொழில்நுட்பங்களை எளிதாக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகிலேயே இந்தியா முன்னிலை வகக்கிறது என்றும் இளைஞர்கள் தொழில் முனைவோராகளாக மாற முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.புதிய மாற்றங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது வலிமையான அரசு அல்ல என்று கூறிய பிரதமர் உள்கட்டமைப்பை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மாணவர்கள் கற்கும் போது இந்தியாவும் கற்றுக் கொள்வதாகவும் மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என பிரதமர் மோடி கூற தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் 2 வாரத்தில் 5 மாணவர்கள் தற்கொலை..! தலையில் அடித்து கதறும் ராமதாஸ்