'கேப்டன்' விஜயகாந்த் படத்தை இனி யாரும் யூஸ் பண்ணக்கூடாது! ஒரே போடாக போட்ட பிரேமலதா! காரணம் இதுதான்!

Published : Aug 06, 2025, 03:36 PM IST
Tamilnau

சுருக்கம்

கேப்டன் விஜயகாந்த் படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Premalatha Orders Political Parties Not Use Captain Vijayakanth Photos: தேமுதிக கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக இருந்து பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்ட அவர் 2005ம் ஆண்டு தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் திமுக, அதிமுகவுக்கு ஒரு மாற்றுக் கட்சியாக உருவெடுத்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, 29 இடங்களில் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். உடல்நலக்குறைவு காரணமாக 2023ம் ஆண்டு காலமான கேப்யன் விஜயகாந்த் மறைந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

விஜயகாந்த் படத்தை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது

விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கட்சியை வளர்க்க பாடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் பிரேமலதா. இந்நிலையில், விஜயகாந்த் படத்தை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று பிரேமலதா திடீரென அறிவித்துள்ளார்.

சினிமாவில் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தலாம்

விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது. தேமுதிக இடம்பெறும் கூட்டணிக்கு வரும்போது வேண்டுமானால் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். அதே வேளையில் சினிமாவில் விஜயகாந்த் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்?

அண்மையில் சில கட்சிகள் விஜயகாந்தின் புகைப்படத்தை தங்களது பிரச்சாரங்களில் தவறாக பயன்படுத்தியதாக தேமுதிக தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்தே பிரமேலதா விஜயகாந்த் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமாவில் விஜயகாந்த் புகைபடத்தையும், அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களையும் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'லப்பர்' பந்து திரைப்படத்தில் விஜயகாந்த் படத்தின் ''நீ பொட்டு வச்ச தங்க குடம்..'' பாடல் இடம்பெற்று பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.

பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

''சினிமா விஜயகாந்த்தின் ஒரு கலை. ஆகவே அங்கு யார் வேண்டுமானாலும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தலாம். ஆனால் அரசியலில் அவரது படத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் தேமுதிகவின் கொள்கைகளை முன்னெடுக்க விஜயகாந்த்தின் படம், பெயரை பயன்படுத்துகிறோம். மற்ற அரசியல் கட்சிகள் விஜயகாந்த் புகைபடத்தை தவறாக பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்'' என்று பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளது. தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்துவதற்கு முன்பு தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!