ஆமாம்.. விஜய் பற்றி சீமான் பேசியது சரிதானே! அப்படியே அந்தர்பல்டி அடித்த பிரேமலதா! தவெகவினர் ஷாக்!

Published : Aug 24, 2025, 02:42 PM IST
Tamilnadu

சுருக்கம்

தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த சீமானுக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். யாரும் விஜயகாந்த் ஆக முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Premalatha Vijayakanth Supports Seeman Who Criticized Vijay: மதுரையில் நடந்து முடிந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசிய பேச்சுதான் இப்போது தமிழ்நாட்டில் ட்ரெண்ட் டாபிக் ஆக உள்ளது. தனது பேச்சில் வழக்கம்போல் திமுகவையும், பாஜகவையும் விமர்சித்த விஜய், இந்த முறை அதிமுகவையும் ஊழல் கட்சி என‌ மறைமுகமாக குறிப்பிட்டார். பிரதமர் மோடியை மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், முதல்வரை அங்கிள் ஸ்டாலின் என பேசியதற்கு பாஜக, திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அதிமுகவின் மூத்த தலைவர்களும் தங்கள் கட்சியை சாடியதற்காக விஜய்க்கு கண்டனம் தெரிவித்தனர்.

விஜயகாந்தை புகழ்ந்து பேசிய விஜய்

மேலும் தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆர் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரையும் விஜய் தூக்கிப்பிடித்தார். என் சினிமா தலைவரும், அரசியல் தலைவரும் எம்.ஜி.ஆர். தான் என குறிப்பிட்ட விஜய், ''எம்.ஜி.ஆருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கருப்பு எம்.ஜி.ஆர் என் அண்னன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்துடன் எனக்கு பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது'' என்று விஜயகாந்தை புகழ்ந்து தள்ளினார்.

முதலில் ஆதரித்த பிரேமலதா

விஜயகாந்தை விஜய் அண்ணன் என சொந்தம் கொண்டாடியது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''விஜய் விஜயகாந்தை அண்ணன் என கூப்பிட்டு இருப்பது அவரது விருப்பம். விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் எங்களுக்கு தம்பி'' என்று தெரிவித்தார். இது ஒருபக்கம் இருக்க, விஜயகாந்த்தை புகழந்து பேசிய விஜய்யை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசித் தள்ளினார்.

விஜய்க்கு சீமான் கண்டனம்

''விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது விஜய் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. விஜயகாந்த் உடல்நலம் குன்றியபோது அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் விஜயகாந்த் என் அண்ணன் என விஜய் உரிமை கொண்டாடுவது ஏன்? இப்போது தன்னுடைய அரசியலுக்காக விஜயகாந்தை கையில் எடுத்திருக்கிறார்'' என்று சீமான் தெரிவித்து இருந்தார்.

சீமானின் கருத்து பிரேமலதா ஆதரவு

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, சீமானின் கருத்து குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரேமலதா, ''சகோதரர் சீமான் சொன்னது உலகம் அறிந்த உண்மை. அந்த உண்மையை அவர் உரைக்க சொல்லி இருக்கிறார். விஜய் விஜயகாந்தை அண்ணன் என்று சொல்லி இருக்கிறார். எங்களை பொறுத்தவரை அவர் தம்பி'' என்றார்.

தவெகவினர் ஷாக்

தொடர்ந்து பேசிய பிரேமலதா, ''விஜயகாந்துக்கு நிகர் அவரே தான். அவரை போல் யாரும் மாறி விட முடியாது. கேப்டன் பெயரையும், படத்தையும் தனது அரசியலுக்காக விஜய் பயன்படுத்தினால் அதை தேமுதிகவினரும், மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விஜய் விஜயகாந்தை அன்பின் வெளிப்பாடாக அண்ணன் என கூறியிருந்தால் சரி. ஆனால் அரசியலுக்காக கூறியிருந்தால் அது தவறு'' என்று தெரிவித்தார். விஜய்யை புகழ்ந்து பேசிய வந்த பிரேமலதா திடீரென அந்தர் பல்டி அடித்து சீமானின் கருத்தை ஆமோதித்துள்ளது தவெகவினரை அதிர்ச்சியடையச செய்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!