
Premalatha Backs Vijay, Calls Conference Incidents 'Common'! சுமார் 2 லட்சம் தொண்டர்கள் கூடிய தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் திமுக, பாஜக, அதிமுக, நாம் தமிழர் என அனைத்து கட்சிகளையும் விஜய் தாக்கி பேசியது இப்போது வரைக்கும் பேசும்பொருளாக உள்ளது. இது ஒருபக்கம் இருக்க தவெக மாநாட்டில் நடந்த சில அசம்பாவிதங்கள் நடந்தன. தவெக பேனர் கட்டிய கல்லூரி மாணவர் உயிரிழந்தார். தவெக கொடிக்கம்பம் சாய்ந்து கார் நொறுங்கியது. வெயிலின் தாக்கத்தல தவெக தொண்டர்கள் மயங்கி விழுந்தது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
விஜய்யின் பவுன்சர்கள் செய்த செயல்
இதுமட்டுமின்றி, தவெக தொண்டர்களிடம் விஜய்யின் பவுன்சர்கள் நடந்து கொண்ட விதம் போலீஸ் நிலையத்தில் புகார் வரைக்கும் சென்றுள்ளது. அதாவது மாநாட்டில் பங்கேற்க வந்த விஜய் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டு இருந்த ராம்ப் வாக்கில் நடந்து சென்றபோது தவெக தொண்டர்கள் சிலர் விஜய்யை பகக்த்தில் இருந்து காணும் ஆர்வத்தில் ராம்ப் வாக் மீது ஏறினார்கள். விஜய்க்கு பாதுகாப்பாக வந்த பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
விஜய் மீது வழக்குப்பதிவு
இதேபோல் ராம்ப் வாக் மீது ஏறி விஜய் பக்கம் வந்த ஒரு இளைஞரை பவுன்சர் ஒருவர் தூக்கி கீழே விசிய காட்சிகள் இணையத்தில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். விஜய்யின் பவுன்சர்கள் தூக்கி வீசியதால் நெஞ்சில் பலத்த அடி ஏற்பட்டதாக கூறி பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின்பேரில் தவெக தலைவர் விஜய் மீதும், பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மீது வழக்குப்பதிவு
திமுக அரசு வேண்டுமென்றே விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தவெக தொண்டர்களும், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்திடம் தவெக மாநாட்டில் நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
விஜய்க்கு பிரேமலதா சப்போர்ட்
அதற்கு பதில் அளித்த பிரேமலதா, ''தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டு இருந்தன. நாம் எல்லாவற்றையும் குறையாகவே பார்க்கக் கூடாது. இளைஞர்கள் ஆர்வக் கோளாறு அந்த ராம்ப் வாக்கில் ஏறி இருக்கிறார்கள். அங்கு இருந்த பவுன்சர்கள் அவர்களை கட்டுப்பட்டுவதற்காக விலக்கி விட்டனர். அப்போது சிலர் கீழே விழுந்துள்ளனர். வேண்டுமென்றே யாரும் தள்ளுவதில்லை.