ஓடும் ரயிலில் பிரசவ வலி; மருத்துவர்களாக அவதாரம் எடுத்த பெண் பயணிகள் - காட்பாடியில் திக் திக் நிமிடங்கள்

By Velmurugan s  |  First Published Nov 2, 2023, 8:38 AM IST

திருப்பதியில் இருந்து திண்டுக்கல் சென்ற விரைவு ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், உடனிருந்த பயணிகள் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25). நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 13 பேருடன் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரஸ் இரயிலில் புறப்பட்டு வந்தனர். இரயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos

undefined

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் இரயிலில் கல்பனாவிற்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி இரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இரயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார்  தயார் நிலையில் இருந்தனர்.

இரயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓடும் இரயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி இரயில் நிலையத்தில்  நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!