அதிகரிக்கும் மின் தேவை... தொடரும் நிலக்கரி தட்டுப்பாடு... மின் உற்பத்தியின் நிலை என்ன?

Published : Apr 08, 2022, 02:50 PM IST
அதிகரிக்கும் மின் தேவை... தொடரும் நிலக்கரி தட்டுப்பாடு... மின் உற்பத்தியின் நிலை என்ன?

சுருக்கம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 5 யூனிட் கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 5 யூனிட் கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைக்கால வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் தாங்காத மக்கள் ஃபேன், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், 5 யூனிட்டுகளில் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.

தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 எந்திரங்களில் நிலக்கரி தட்டுபாடு காரணமாக 4 யுனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றில் மட்டுமே 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாட்டால் 1 ஆவது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது நாள் ஒன்றுக்கு தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு 17,000 முதல் 18,000 டான் நிலக்கரி தேவை என்கிற நிலையில் ஒரு யூனிட்டுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் நிலக்கரி தான் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறது.

ஒரு யூனிட்டுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே வருவதால் அதற்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக 2 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் இருக்கக்கூடிய தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தற்போது கையிருப்பில் நிலக்கரி இல்லை என கூறப்படுகிறது. அன்றாடம் வரக்கூடிய நிலக்கரியை வைத்தே 1 அல்லது 2 யூனிட்டுகள் இயக்கப்படுவதாக அனல் மின் நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகளின் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை ஓதுக்கீடு செய்தால் மட்டுமே அனல் மின்நிலையதில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதை தடுக்க முடியும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தங்கத்தையே அள்ளி அள்ளி கொடுத்தாலும் திமுகவுக்கு ஒருத்தரும் ஓட்டுப்போட மாட்டாங்க.. செல்லூர் ராஜூ கலாய்
மீண்டும் மழை எச்சரிக்கை! அடுத்த 5 நாள் வானிலை ரிப்போர்ட்! டெல்டா வெதர்மேன்!