உஷார்..! தமிழகத்தில் கனமழை.. அடித்து ஊற்ற போகும் மாவட்டங்கள் எவையெவை..! வானிலை மையம் அப்டேட்..

Published : Apr 08, 2022, 02:30 PM ISTUpdated : Apr 08, 2022, 02:31 PM IST
உஷார்..! தமிழகத்தில் கனமழை.. அடித்து ஊற்ற போகும் மாவட்டங்கள் எவையெவை..! வானிலை மையம் அப்டேட்..

சுருக்கம்

இன்றும் நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக

08.04.2022, 09.04.2022: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

10.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

11.04.2022, 12.04.2022: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி மநரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வவப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை  27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகளிர்களுக்கு இவ்வளவு திட்டங்களா.! கொத்து கொத்தாக அள்ளிக்கொடுத்த தமிழக அரசு.! குஷியில் பெண்கள்!
தவெகவுக்கு போட்டியாக மாஸ் காட்டும் திமுக..? 1.30 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்..