கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !

By Raghupati RFirst Published Aug 1, 2022, 9:02 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை தொடர்பான புதிய உத்தரவு வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து,  வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது. அத்துடன் பள்ளியில் நடைபெற்ற  கலவரம் தொடர்பாக  வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஐந்து பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து  சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி  மரண வழக்கில்,  நிர்வாகிகள் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

கடந்த 29ஆம் தேதி இம்மனுவை விசாரித்த விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று  ஒத்திவைத்தது. கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் ஜாமீன் கோரிய மனு  மீதான விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம். அத்துடன் கள்ளக்குறிச்சி வன்முறை விவகாரம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 309 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் இன்று காணொளி மூலம் ஆஜர் படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பெற்றோர்கள், உறவினர்கள் கூடாதவாறு 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர், ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு

click me!