மாணவர்களே அலர்ட்!! மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கால அவகாசம்..

Published : Aug 01, 2022, 03:42 PM IST
மாணவர்களே அலர்ட்!! மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கால அவகாசம்..

சுருக்கம்

6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவிதொகை திட்டத்திற்கு பதிவு செய்த விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், திருத்தங்களை செய்தலை விரைந்து மேற்கொள்ள உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

மேலும் படிக்க:சென்னை அருகே 2வது விமான நிலையம்.. எங்கு தெரியுமா ? மத்திய அரசு அறிவிப்பு !

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டிலே இத்திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தகுதியுடைய மாணவிகள் கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:கவனத்திற்கு !! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..

மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள், பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள், மாணவிகள் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகிய விவரங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் உதவிதொகை திட்டத்திற்கு பதிவு செய்த விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், திருத்தங்களை செய்தலை விரைந்து மேற்கொள்ள உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!