சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கு ஏற்ற இடத்தை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-வது விமான நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கபட்டு வருகின்றன. சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம், திருப்போரூர், மதுராந்தகம், பரந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் என 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
undefined
இந்த 4 இடங்கள் குறித்து பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளின் முடிவில் பரந்தூர் அல்லது பன்னூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. மேலும் பன்னூரில் 4500 ஏக்கர், பரந்தூரில் 4791 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டன. இருப்பினும் எந்த இடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
பரந்தூரில் ரூ1,500 கோடி மதிப்பீட்டில் 5,000 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது பரந்தூர். சென்னையின் மையப்பகுதியில் இருந்து 69 கிலோமீட்டர் தூரத்தில் காஞ்சிபுரம் அருகே அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 1 பாட்டில் வாங்கினால், 2 பாட்டில் சரக்கு இலவசம்.! அதிரடி ஆஃபர்