
திருவாரூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இரண்டாவது நாளாக தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
"தபால் துறை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜி.டி.எஸ். கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.
தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பை உடனே வெளியிட வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நேற்று 2-வது நாளாக அஞ்சல் ஊழியர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
துணை செயலாளர் இளவரசன், கிராம அஞ்சலக ஊழியர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணன், தபால் ஊழியர்கள் சங்க செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.