பொங்கல் சிறப்பு கட்டண ரயில்கள் இன்று முதல் இயக்கம்

By Velmurugan sFirst Published Jan 12, 2023, 9:55 AM IST
Highlights

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட வெளியூரில் தங்கி பணியாற்றுபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ஒரே நேரத்தில் பயணம் செய்வதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தென்னக ரயில்வே சிறப்பு ரயிகளை இயக்க உள்ளது.

அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்புக்கட்டண ரயில், 12ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புக்கட்டண ரயில் மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.124 மதிப்பில் கடத்தல் பொருள் பறிமுதல்

மறு மார்க்கத்தில் ஜன.13ம் தேதி பகல் 1 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்புக்கட்டண ரயில் மறு நாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

புத்தாண்டு தினத்தில் நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜயகாந்த்; தொண்டர்கள் மகிழ்ச்சி

ஜன.13ம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறு நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் ஜன.16ம் தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்புகட்டண ரயில் மறு நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படின்னா நீங்க போற பஸ் எங்க நிக்கும் தெரியுமா? இதோ முழு தகவல்.!

ஜன.17ம் தேதி காலை 11.40 மணிக்கு கொசுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறு நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் ஜன.18ம் தேதி காலை 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்புக்கட்டண ரயில் மறு நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொசுவேலியை சென்றடைகிறது.

அவங்களே சொல்லிட்டாங்களா.. அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட இபிஎஸ்? அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

எர்ணாகுளத்தில் இருந்து ஜன.12ம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் ஜன.13ம் தேதி பகல் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு கொச்சி சென்றடைகிறது.

தாம்பரத்தில் இருந்து ஜன.16ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறு மார்க்கத்தில் ஜன.17ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் மறு நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 29ம் தேதி நடைபெற்றது.

click me!