சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பு அமர்வில் பட்டியலிடவும்... பொன்.மாணிக்கவேல் கூடுதல் மனு!!

Published : Jul 25, 2022, 09:36 PM IST
சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பு அமர்வில் பட்டியலிடவும்... பொன்.மாணிக்கவேல் கூடுதல் மனு!!

சுருக்கம்

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளை சிறப்பு அமர்வில் பட்டியலிட வேண்டும் என முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். 

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளை சிறப்பு அமர்வில் பட்டியலிட வேண்டும் என முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: இன்னும் 4 ஆண்டுகள்தான்.. தமிழகத்தில் என்னுடைய ஆட்சி.. சீமான் தாறுமாறு கணிப்பு..!

அந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வராஜ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான மூன்று வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஒரு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும், மற்றொரு வழக்கை சிவ காஞ்சி காவல் நிலைய விசாரணைக்கு மாற்றியும், மேலும் ஒரு வழக்கில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

மேலும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை இரு நீதிபதிகள் கண்காணித்து வருவதால், அதனுடன் தொடர்புடைய வழக்குகளில் தனித்தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வெவ்வேறு அமர்வுகளில் வழக்குகள் பட்டியலிடப்படுவதாலும், அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளாலும் குழப்பம் ஏற்படுவதால், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இதே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமெனவும், அதுதொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதிகள் அந்த கூடுதல் மனுவை வரும் 29 ஆம் தேதி அன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!