சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

By Narendran S  |  First Published Jul 25, 2022, 8:40 PM IST

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உச்சநீதிமன்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உச்சநீதிமன்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தனது மகளை மீட்டுத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறுமியை வேப்பூர் அருகே மீட்டுள்ளதாகவும், குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: லெஜண்ட் சரவணன் போல் விளம்பர படங்களில் போஸ் கொடுக்கும் ஸ்டாலின்...! திமுக அரசை கலாய்க்கும் செல்லூர் ராஜூ

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தனது மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை எனவும், மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை எனவும் கூறி, சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கில் போலீசார் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச் சட்டப்படியும் செயல்படவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருவள்ளூர் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக பெண் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவேண்டும் எனவும், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் விதிமுறைகள் வகுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விதிமுறைகளையும், போக்சோ சட்ட விதிகளையும் பின்பற்ற வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார். 

click me!