பெரியார் பல்கலை. துணை வேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு.! ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக சீறும் அரசியல் கட்சிகள்!!

By Ajmal Khan  |  First Published Jul 2, 2024, 11:21 AM IST

துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஒருவரை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்திருப்பது ஏற்புடையது அல்ல என அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளது. 


துணைவேந்தர் மீது புகார்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக் காலம் ஜூன் 30ம்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் ஆளுநநர் ரவி மேலும் ஒரு வருடத்திற்கு துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

EPS : சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்களா.!! இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது- பாஜக அரசுக்கு எதிராக சீறும் எடப்பாடி

ஆளுநர் உத்தரவிற்கு எதிர்ப்பு

இது தொடர்பாக மனித நேயமக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிவடைந்தது. இந்நிலையில், அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஒருவரை மீண்டும் பதவி நீட்டிப்புசெய்திருப்பது ஏற்புடையது அல்ல. தனது பொறுப்பை உணராமல் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக இவர் மீது கடும்குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கின்றன. 

வேதனை அளிக்கிறது

பல்கலைக்கழகத்தின் தொழிலாளர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்துதுணைவேந்தருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடுஅரசின் உயர் கல்வித்துறைக்கு எதிரான நிலைப்பாட்டைத் தான் ஆளுநர் ரவி செய்து கொண்டிருக்கிறார். இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களின் வருகை தொடங்க இருக்கும் நேரத்தில் இது போன்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. ஊழல்வாதிக்குத் துணை போகும் ஆளுநரைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறோம் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

Anbumani : அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்கனும்.. அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது.! அன்புமணி
 

click me!