மங்களூருவில் ஆட்டோ வெடித்த சம்பவம் தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மங்களூருவில் ஆட்டோ வெடித்த சம்பவம் தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து சிதறியது. இதில் ஆட்டோவில் பயணித்த பயணியும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். இதை அடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மங்களூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி
பின்னர் இதுக்குறித்து கர்நாடக டிஜிபி பேசுகையில், ஆட்டோ வெடித்த விபத்து தற்செயலானது அல்ல, பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். சமீபத்தில் கோவையில் கார் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய தற்போது மீண்டும் அதுபோலதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..! சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த நிலையில், ஆட்டோ விபத்தில் காயமடைந்தவரின் செல்போன் சிம்கார்டு தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த சிம் கார்டு வாங்க பயன்படுத்தப்பட்ட ஆதார் கார்டு உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தை சேர்ந்தவ ஒருவருடையது என்பது தெரியவந்தது. இதை அடுத்து உதகைக்கு விரைந்த போலீஸார், அந்த நபரை கோவை அழைத்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவத்திற்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் எதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.