Arrest : 100 கோடி நில மோசடி.! அதிமுக மாஜி அமைச்சருடன் கை கோர்த்த இன்ஸ்பெக்டர்.! தட்டித்தூக்கிய போலீஸ்

By Ajmal Khan  |  First Published Jul 17, 2024, 11:15 AM IST

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலியாக நிலம் கையகப்படுத்து என்ஓசி சான்றிதழ் வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். 
 


நில மோசடி- மாஜி அமைச்சர் கைது

கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அபகரித்துவிட்டதாக தொழிலதிபர் பிரகாஷ் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகவும்,  மேலும்   தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்டம்  சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது தன்னை போலீசார் கைது செய்யக்கூடும் என அறிந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு கோரினார். 

Tap to resize

Latest Videos

ADMK : அதிமுகவினருக்கு காலையிலேயே ஷாக் தகவல்.! மாஜி அமைச்சரை திருச்சி சிறையில் அடைக்க உத்தரவு

நில மோசடிக்கு உதவிய ஆய்வாளர்

ஆனால் நீதிமன்றம் இரண்டு தடவை ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக சுமார் ஒரு மாத காலம் தலைமறைவானார். இதனையடுத்து போலீசாரும் தீவிரமாகதேடி வந்த நிலையில், நேற்று கேரளாவில் வைத்து எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். நேற்று அவரிடம் விசாரணை நடைபெற்று முடித்த போலீசார் இன்று அதிகாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் திருச்சி மத்திய சிறையில அடைக்கப்பட்டார்.  இந்த சூழ்நிலையில் நில மோசடி புகாரில் வில்லவாக்கம் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றிய பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது கரூர் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். 

இன்ஸ்பெக்டர் கைது

இதன் காரணமாக அமைச்சரோடு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்திற்கு வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் என்ஓசி சான்றிதழ் வழங்கியுள்ளார். இதனையடுத்து தான் 22ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு உதவியதாக காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசாரின் கைது நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். 

Dheeraj Kumar : யார் இந்த தீரஜ் குமார்.? உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டதின் பின்னனி என்ன.?

click me!